அழகு குறிப்பு.

💥 உடல் அழகு பெற,
     சில வித்தியாசமான டிப்ஸ்கள்

▪ கண்கள் அழகாக இருக்க வேண்டுமா?
சுற்றியுள்ளோரின் நல்லவற்றை மட்டுமே
காணப் பழகுங்கள்.

▪ முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?
புன்னகையோடு மனிதர்களுக்கு தினமும்
முகமன் கூறிப் பாருங்கள்.

▪ மெல்லிய உடல் வேண்டுமா?
உங்களது உணவை, பசித்த ஏழைகளுடன்
பகிர்ந்துண்டு பாருங்கள்.

▪ உடை அலங்காரம் பெற வேண்டுமா?
அரை நிர்வாணிகளுக்கும் உடை உடுத்த
உதவி செய்து பாருங்கள்.

▪ அழகான கூந்தல் வேண்டுமா?
அனாதைக் குழந்தைகளின் தலையை
இரக்கமுடன் தடவிப் பாருங்கள்.

▪ கைகள் அழகு பெற வேண்டுமா?
இல்லாத எளிய மக்களுக்கு ஈந்துதவி
செய்து பாருங்கள்.

▪ கால்கள் உறுதி பெற வேண்டுமா?
ஐவேளையும் தொழுவதற்காக அன்றாடம்
நடந்து பழகிப் பாருங்கள்.

● வெறும் ஒப்பனைகளால் உங்கள் முகம் மட்டுமே அழகு பெறும். ஆனால், இவற்றைக் கடை பிடித்துப் பாருங்கள். உங்கள் அகமும் அழகு பெறும்.

● படைத்த இறைவன் நமக்கு  இரண்டு கைகளை வழங்கியுள்ளான். அதில் ஒன்று, நமக்கு. இன்னொன்று, இன்னொருவருக்கு உதவுவதற்கு என்பதை மறந்து விட வேண்டாம்.

---------------------------

Comments

Popular posts from this blog