Posts

Showing posts from February, 2016

திருமண பேச்சுவார்தை

ணப்பெண் அலங்காரம் பற்றி்: பருவமங்கையரின் பெற்றோரே! வாலிப சகோதரர்களே! பணிவாய் ஓர் வேண்டுகோள்! திருமணங்களின் போது பரவலாக மணப்பெண்ணை அலங்கரித்து, ஒரு பொம்மையாக பலர்முன் பார்வைக்கு அமர்த்தும் சீரழிந்த கலாச்சாரத்தை தவிர்க்க முயற்சிக்க மாட்டீர்களா? ••• விதிவிலக்காக, மார்க்க வரையரைக்கு உட்பட்டு அழகான வழிகாட்டலிலே நடைபெறும் திருமணங்களும் இல்லாமல் இல்லை.•••• அல்ஹம்துலில்லாஹ்! சில மணித்தியாலங்கள் அப்பெண், குறிப்பாக அமைதியாக, அடக்கமாக வளர்ந்த பெண்கள் படும்பாடு, தர்மசங்கடமான நிலைகள் இவற்றை எப்போது உணரப்போகின்றீர்கள்? அத்தனை பேரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை எப்படி அவள் தாக்குப்பிடிக்க முடியும்.? ••• இப்படி சொல்லும் போது….. ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும், அநாகரீகத்தையும் பெரிதும் விரும்பும் சகோதரிகளுக்கு கோபம் வரலாம். ஆனால் அன்பு சகோதரிகளே! புரிந்துகொள்ளுங்கள்! இவ்வாறான செயல்கள் உங்களுக்கோ, குடும்பத்தினருக்கோ துளி நன்மையை கூட பெற்றுத்தர மாட்டாது. நவநாகரீகம் தலைவிரித்தாடும் உலகில் அறிவும் விருத்தியடைந்து கொண்டு தான் போகின்றது. அந்த அறிவையும், மார்க்க அறிவையும் பயன்படுத்தி, சற்ற...
#காதலர் தின #ஸ்பெஷல் இதுதான் காதல்! --------------- உம்மு சுலைம் என்ற பெண் மீது காதல் கொண்டு அவரை பெண் கேட்டு போனார் அபு தல்ஹா என்பவர். இந்த மணமகன் சாதாரணமானவரல்ல. அந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் ஒருவர். நன்னடத்தை உள்ளவர், அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்றவர். அது போன்று உம்மு சுலைம் என்ற அந்த பெண்மணியும் அழகுடன் நன்னடத்தையும் நல்ல பண்பாடு மிக்க குடும்பத்தையும் சார்ந்தவர். அபு தல்ஹா நேரடியாகவே உம்மு சுலைமை சந்தித்து தனது காதலை அவரிடம் தெரிவித்தார். மணமுடிக்க விரும்புவதை கூறினார். நல்லவரும் செல்வந்தருமான அவரை மணமுடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் இருக்கும் போது இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் தம்மை தேடி வந்திருக்கிறது. அதை அவர் விட்டு விடுவாரா என்ன? ஆனால், ‘நான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிம் பெண், நான் எப்படி சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கும் உங்களை திருமணம் செய்ய முடியும். அது முடியாது’ என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். தனது காதல் நிறைவேறாமல் போனதால் கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார் அபு தல்ஹா. இன்று மனம் மாறியிருக்கும். இல்லையெனில...

அழகு குறிப்பு.

💥 உடல் அழகு பெற,      சில வித்தியாசமான டிப்ஸ்கள் ▪ கண்கள் அழகாக இருக்க வேண்டுமா? சுற்றியுள்ளோரின் நல்லவற்றை மட்டுமே காணப் பழகுங்கள். ▪ முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? புன்னகையோடு மனிதர்களுக்கு தினமும் முகமன் கூறிப் பாருங்கள். ▪ மெல்லிய உடல் வேண்டுமா? உங்களது உணவை, பசித்த ஏழைகளுடன் பகிர்ந்துண்டு பாருங்கள். ▪ உடை அலங்காரம் பெற வேண்டுமா? அரை நிர்வாணிகளுக்கும் உடை உடுத்த உதவி செய்து பாருங்கள். ▪ அழகான கூந்தல் வேண்டுமா? அனாதைக் குழந்தைகளின் தலையை இரக்கமுடன் தடவிப் பாருங்கள். ▪ கைகள் அழகு பெற வேண்டுமா? இல்லாத எளிய மக்களுக்கு ஈந்துதவி செய்து பாருங்கள். ▪ கால்கள் உறுதி பெற வேண்டுமா? ஐவேளையும் தொழுவதற்காக அன்றாடம் நடந்து பழகிப் பாருங்கள். ● வெறும் ஒப்பனைகளால் உங்கள் முகம் மட்டுமே அழகு பெறும். ஆனால், இவற்றைக் கடை பிடித்துப் பாருங்கள். உங்கள் அகமும் அழகு பெறும். ● படைத்த இறைவன் நமக்கு  இரண்டு கைகளை வழங்கியுள்ளான். அதில் ஒன்று, நமக்கு. இன்னொன்று, இன்னொருவருக்கு உதவுவதற்கு என்பதை மறந்து விட வேண்டாம். ---------------------------