திருமண பேச்சுவார்தை
ணப்பெண் அலங்காரம் பற்றி்: பருவமங்கையரின் பெற்றோரே! வாலிப சகோதரர்களே! பணிவாய் ஓர் வேண்டுகோள்! திருமணங்களின் போது பரவலாக மணப்பெண்ணை அலங்கரித்து, ஒரு பொம்மையாக பலர்முன் பார்வைக்கு அமர்த்தும் சீரழிந்த கலாச்சாரத்தை தவிர்க்க முயற்சிக்க மாட்டீர்களா? ••• விதிவிலக்காக, மார்க்க வரையரைக்கு உட்பட்டு அழகான வழிகாட்டலிலே நடைபெறும் திருமணங்களும் இல்லாமல் இல்லை.•••• அல்ஹம்துலில்லாஹ்! சில மணித்தியாலங்கள் அப்பெண், குறிப்பாக அமைதியாக, அடக்கமாக வளர்ந்த பெண்கள் படும்பாடு, தர்மசங்கடமான நிலைகள் இவற்றை எப்போது உணரப்போகின்றீர்கள்? அத்தனை பேரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை எப்படி அவள் தாக்குப்பிடிக்க முடியும்.? ••• இப்படி சொல்லும் போது….. ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும், அநாகரீகத்தையும் பெரிதும் விரும்பும் சகோதரிகளுக்கு கோபம் வரலாம். ஆனால் அன்பு சகோதரிகளே! புரிந்துகொள்ளுங்கள்! இவ்வாறான செயல்கள் உங்களுக்கோ, குடும்பத்தினருக்கோ துளி நன்மையை கூட பெற்றுத்தர மாட்டாது. நவநாகரீகம் தலைவிரித்தாடும் உலகில் அறிவும் விருத்தியடைந்து கொண்டு தான் போகின்றது. அந்த அறிவையும், மார்க்க அறிவையும் பயன்படுத்தி, சற்ற...